TNPSC Thervupettagam

அமெரிக்க அரசியலமைப்பின் 25வது திருத்தம்

April 13 , 2026 6 days 99 0
  • அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தம், தலைமைத்துவம் மற்றும் இயலாமை தொடர்பான விவாதங்களின் பின்னணியில் தற்போது விவாதிக்கப்படுகிறது.
  • இது அதிபரின் பதவி மாற்றம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக, ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்பட்ட பிறகு 1967-ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.
  • இது அதிபர் இறந்துவிட்டாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ துணை அதிபர் , அடுத்த அதிபராக பதவியேற்பார் என்று கூறுகிறது.
  • அதிபரின் இயலாமையைக் கையாள்வதற்கும், காலியாக உள்ள துணை அதிபர் பதவியை நிரப்புவதற்குமான விதிகளையும் இது வழங்குகிறது.
  • இதன் 4வது பிரிவு, துணை அதிபர் மற்றும் அமைச்சரவையின் பெரும்பான்மையினர் இணைந்து, அதிபர் தனது கடமைகளைச் செய்ய இயலாதவர் என அறிவிக்க அனுமதிக்கிறது.
  • இதுபோன்ற சூழ்நிலையில், துணை ஜனாதிபதி தற்காலிக ஜனாதிபதியாக மாறுவார்; ஆனால் இதனை அதிபர் எதிர்த்து முறையீடுசெய்தால், காங்கிரஸ் இப்பிரச்சினை குறித்து (அமெரிக்க நாடாளுமன்றம்) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் முடிவெடுக்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்