அமெரிக்க இராணுவம் பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த நிதியுதவி ரத்து
September 5 , 2018 2620 days 806 0
பயங்கரவாத அமைப்பினருக்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பதில் தோல்வி அடைந்ததன் விளைவாக பாகிஸ்தானுக்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியை ரத்து செய்ய அமெரிக்க இராணுவம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ட்ரம்ப் தனது புதிய தெற்காசியக் கொள்கையை வெளியிட்டு, அத்தகைய அமைப்பினருக்கு எதிராக மேலும் அதிக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பயங்கரவாதக் குழுக்களை வளர்ப்பதாகவும் அவர்களுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க முன்விளையாததாகவும் குற்றம்சாட்டி பாகிஸ்தானுக்கு, பாதுகாப்பிற்கான நிதி உதவியாக15 பில்லியன் டாலர்கள் வழங்குவதை அமெரிக்கா இந்த ஆண்டு ஜனவரி மாதத்தோடு நிறுத்தியது.