அமெரிக்க-சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் (STA)
July 25 , 2023 851 days 390 0
அமெரிக்கச் சட்ட வல்லுநர்கள் பல தசாப்தங்கள் பழமையான அமெரிக்க-சீன நாட்டு உடன்படிக்கையைப் புதுப்பிக்க வேண்டாம் என்று அரசினை வலியுறுத்தியுள்ளனர்.
1979 ஆம் ஆண்டில் கையெழுத்தான சீன-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தமானது அதன்பிறகு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு என்று ஒருமுறையும் புதுப்பிக்கப் பட்டது.
இது பல தசாப்தங்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பினை மேற்கொள்வதற்கான அடித்தளத்தினை இது அமைத்தது.
இந்த கூட்டுறவானது வளிமண்டலம் மற்றும் வேளாண் அறிவியல், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற துறைகளை உள்ளடக்கியது.