மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு முறையே சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் எஃகு அமைச்சகம் ஆகியவற்றின் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ராம் சந்திரப்பிரசாத் சிங் ஆகிய இரண்டு மத்திய அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்து உள்ளனர்.
அவர்கள் ராஜினாமா செய்ததையடுத்து பிரதமர் மோடி அவர்களின் ஆலோசனையின் படி, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ராஜினாமா மனுக்களை ஏற்றுக் கொண்டார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் இரு அமைச்சர்கள் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.