2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசானது வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுகிறது.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத் தொடர்ந்து போராடியதற்காகவும். அந்த நாட்டில் சர்வாதிகாரம் மாறி ஜனநாயகம் மலர்வதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், அவர் தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், அவர் அந்நாட்டிலேயே வசித்து வருவது, மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது.