அமைதியுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கான சர்வதேச தினம் - மே 16
May 19 , 2023 826 days 307 0
பல்வேறு பின்னணியில் உள்ள மக்களிடையே அமைதியான சகவாழ்வு, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
1997 ஆம் ஆண்டில், பொதுச் சபை 2000 ஆம் ஆண்டினை "அமைதிக் கலாச்சாரத்திற்கான சர்வதேச ஆண்டாக" அறிவித்தது.
அடுத்த ஆண்டில் 2001 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை, "உலக குழந்தைகளுக்கான அமைதி மற்றும் அகிம்சை கலாச்சாரத்திற்கான ஒரு சர்வதேச தசாப்தமாக" கடைபிடிக்கப் படும் என்று அறிவித்தது.
1999 ஆம் ஆண்டில் அமைதிக் கலாச்சாரம் குறித்தப் பிரகடனம் மற்றும் செயல் திட்டத்தினை ஏற்றுக் கொண்ட நிகழ்வானது, நீடித்த அமைதி மற்றும் அகிம்சையின் அவசியத்தை மேலும் வலியுறுத்தியது.