அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு 2021
November 26 , 2022 1058 days 533 0
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, 2021 ஆம் ஆண்டின் அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசை கல்வித் துறையில் செயலாற்றி வரும் பிரதாம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார்.
நாட்டின் குழந்தைகளுக்கு, குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின் போது தரமான கல்வியை வழங்குவதனை உறுதி செய்வதில் பிரதாம் அமைப்பின் பணியை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று காலத்தின் மத்தியில் பள்ளிகள் மூடப்பட்ட போதும், குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஏதுவான வகையில் கல்வியை வழங்குவதற்கு எண்ணிமத் தொழில் நுட்பத்தையும் பிரதாம் நிறுவனம் பயன்படுத்தியது.
இந்த அறக்கட்டளையின் வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கையானது (ASER), மூன்று கண்டங்களில் உள்ள 14 நாடுகளில் உள்ள கல்வி சார்ந்த திட்ட விளைவுகள் மற்றும் கற்றல் குறைபாடுகளை மதிப்பிடுவதற்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது.
அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு, இந்திரா அவர்களின் இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களை முன்மாதிரியாகக் கொண்ட நபர்களுக்கு வழங்கப் படுகிறது.