அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான உலக அறிவியல் தினம் 2026 - நவம்பர் 10
November 13 , 2026 2 days 81 0
இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால் (UNESCO) 2001 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
இதன் முதல் கொண்டாட்டம் 2002 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதியன்று நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டில், 2024-2033 ஆம் ஆண்டுகளை நீடித்த வளர்ச்சிக்கான அறிவியல் பத்தாண்டாக (International Decade of Sciences for Sustainable Development) அறிவித்தது.
இந்த நாள் அறிவியல் ஒத்துழைப்பு, நீடித்த வளர்ச்சி மற்றும் உலகளாவிய அமைதியை ஊக்குவிக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Common Ground Through Science Diplomacy என்பதாகும்.