அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான உலக அறிவியல் நாள் - நவம்பர் 10
November 11 , 2020 1701 days 527 0
சமுதாயத்தில் அறிவியலின் முக்கியப் பங்கையும், வளர்ந்து வரும் விஞ்ஞான சிக்கல்கள் குறித்த விவாதங்களில் அதிக அளவில் பொதுமக்களைப் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் எடுத்துக் காட்டுகிறது.
இது ஆரம்பத்தில் 1999 ஆம் ஆண்டில் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த உலக அறிவியல் மாநாட்டில் முன்மொழியப் பட்டது.
2001 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ நிறுவனம் அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான உலக அறிவியல் நாளின் அதிகாரப் பூர்வ பிரகடனத்தை வெளியிட்டது.
அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான முதலாவது உலக அறிவியல் நாள் நவம்பர் 10 - 2002 அன்று கொண்டாடப் பட்டது.
இந்த ஆண்டின் கருத்துரு “சமூகத்திற்கான மற்றும் சமூகத்துடனான அறிவியல்” என்பதாகும்.