முகலாயத் தோட்டங்கள் என்று பிரபலமாக அறியப்பட்ட, இராஷ்டிரபதி பவன் தோட்டங்கள் அம்ரித் உத்யன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
எட்வின் லுட்யென்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தோட்டமானது 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதோடு, இது முகலாய மற்றும் ஆங்கிலேயப் பாணியிலான வடிவமைப்புகளைக் கொண்டது.
இந்தப் பிரதானத் தோட்டமானது அந்தத் தோட்டத்தைச் சதுர வடிவமாகப் பிரிக்கிற வகையில், முகலாய நில வடிவமைப்பில் காணப்படும் பொதுவான அம்சமான, சார் பாக் என்று அழைக்கப்படுகிற வகையில் (நான்கு மூலைகள் கொண்ட தோட்டம்), செங் கோணங்களில் வெட்டும் இரண்டு ஓடைகளைக் கொண்டு உள்ளன.