TNPSC Thervupettagam

அயல் ஊடுருவல் உயிரினங்களை ஒழித்தல் - சென்னா ஸ்பெக்டபிலிஸ்

December 12 , 2025 13 days 106 0
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒவ்வொரு வனப் பிரிவிலிருந்தும் சென்னா ஸ்பெக்டபிலிஸை அகற்றுவதற்காக தமிழ்நாடு அரசானது நாட்டின் மிகப்பெரிய ஒழிப்பு முயற்சிகளில் ஒன்றை மேற்கொண்டு வருகிறது.
  • சென்னா ஸ்பெக்டபிலிஸ் என்பது ஃபேபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஊடுருவல் சார்ந்த, வேகமாக வளரும் மஞ்சள் நிற பூக்கும் மரமாகும்.
  • இது தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது என்பதோடு மேலும் இது நீலகிரி, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளில் அதிகளவில் பரவிக் காணப்படுகிறது.
  • வறண்டது முதல் ஈரப்பதமான இலையுதிர் காடுகளில் செழித்து வளர்கின்ற இது ஏராளமான விதைகள் மூலம் விரைவாகப் பரவுகிறது என்பதோடு இது அடர்த்தியான ஒரு பயிர்ப் பரவலை உருவாக்குகிறது.
  • இது பல்லுயிரியலைக் குறைப்பதன் மூலமும், வன மீளுருவாக்கத்தைக் குறைப்பதன் மூலமும், தீ பரவும் அபாயத்தை அதிகரிப்பதன் மூலமும், வனவிலங்குகளுக்கான தீவனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்