அரசின் உதவித் தொகை பெறும் உரிமை – ஒரு அடிப்படை உரிமை அல்ல
September 30 , 2021 1391 days 535 0
ஒரு நிறுவனத்தின் (பெரும்பான்மை (அ) சிறுபான்மை நிறுவனம் எதுவாயினும்) மூலம் அரசு உதவித் தொகை பெறும் உரிமையானது ஒரு அடிப்படை உரிமை அல்ல என்றும், அது ஒரு கொள்கை சார்ந்த விசயம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
வழங்கப்படும் உதவித் தொகையானது அதனைப் பெறும் நிறுவனங்கள் இணங்க வேண்டிய நிபந்தனைகளைக் கொண்டது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அந்த நிபந்தனைகளை ஒரு நிறுவனம் ஏற்க விரும்பவில்லை எனில், அது உதவித் தொகையை நிராகரிக்கலாமே தவிர அந்த உதவித் தொகையினை அதன் சொந்த நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்று கூற இயலாது.
உதவித் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக அரசு ஒரு கொள்கையைத் தயாரித்தால், ஒரு நிறுவனம் அதைத் தனது உரிமை எனக் கோரி வாதிட முடியாது.
சட்டப்பிரிவு 30(2) என்பதின் கீழ், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை வழங்கீட்டில், மதம் (அ) மொழிசார்ந்த சிறுபான்மையினர் நிர்வாகத்தின் கீழுள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் அரசு பாகுபாடு காட்டக் கூடாது.