அரசியலமைப்பு சார்ந்த கல்வியறிவு பெற்ற முதல் மாவட்டம்
January 18 , 2023 983 days 580 0
இந்தியாவின் கொல்லம் மாவட்டமானது, இந்தியாவில் அரசியலமைப்பு சார்ந்த கல்வியறிவு பெற்ற முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
கொல்லம் மாவட்டப் பஞ்சாயத்து, மாவட்டத் திட்டமிடல் குழு மற்றும் கேரள உள்ளூர் நிர்வாகக் கழகம் (KILA) ஆகியவை இணைந்து நடத்திய ஏழு மாத காலப் பிரச்சாரத்தின் விளைவாக இந்த வெற்றியினை அந்த மாவட்டம் பெற்றுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது, இம்மாவட்டத்தில் உள்ள 7 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 23 லட்சம் குடிமக்களுக்கு அரசியலமைப்பு பற்றிய கல்வியறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த இலக்கினை அடைவதற்காக, கொல்லத்தில் உள்ள சுமார் 90% மக்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன.