அரசியலமைப்பு (முதல் திருத்தம்) சட்டம், 1951ன் 75 ஆண்டுகள்
June 24 , 2026 9 days 172 0
2026 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று அரசியலமைப்பு (முதல் திருத்தம்) சட்டம், 1951 இன் 75வது ஆண்டு நிறைவு அனுசரிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து வெறும் 15 மாதங்களிலேயே, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கீழ் 1951 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இது இயற்றப் பட்டது.
இந்தத் திருத்தம் பேச்சுரிமை, சமத்துவ விதிமுறைகள் மற்றும் சொத்துரிமைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது.
சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் (SEBCs), பட்டியலிடப்பட்ட சாதியினர் (SCs) மற்றும் பழங்குடியினருக்கு (STs) சிறப்பு சலுகைகளை அனுமதிக்க சரத்து 15(4) சேர்க்கப்பட்டது.
ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டங்கள் உட்பட நிலச் சீர்திருத்தச் சட்டங்களை நீதிப்புனராய்விலிருந்து பாதுகாப்பதற்காக, சரத்து 31A மற்றும் 31B சேர்க்கப்பட்டு, ஒன்பதாவது அட்டவணை உருவாக்கப்பட்டது.
அரசின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, வெளிநாடுகளுடனான நட்பு உறவுகள், கண்ணியம், ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு மற்றும் குற்றச் செயல்களைத் தூண்டுதல் ஆகியவற்றின் நலன் கருதி, சுதந்திரமான பேச்சுரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க சரத்து 19(1)(a) திருத்தப்பட்டது.