இந்த மசோதாவானது மக்களவையில் மத்திய சட்ட மற்றும் நீதித் துறை அமைச்சரான திரு. ரவிசங்கர் பிரசாத் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.
அரசியலமைப்பானது (பிரிவு 334) மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களில், பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கு இடங்களை ஒதுக்குவதற்கும் ஆங்கிலோ - இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்வதற்கும் வழிவகை செய்கின்றது.
இந்த இட ஒதுக்கீட்டு விதிமுறையானது அரசியலமைப்பு இயற்றப்பட்டதிலிருந்து அடுத்த 70 ஆண்டு காலத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று காலாவதியாக இருக்கின்றது.
இந்த மசோதாவானது பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை 2030 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி வரை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முயல்கின்றது.
இருந்த போதிலும், இந்த மசோதாவானது ஆங்கிலோ - இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு விதிமுறையை நீட்டிப்பதற்கு முன்மொழிய வில்லை. இச்சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டு விதிமுறை ஜனவரி 25 ஆம் தேதியுடன் காலாவதியாகின்றது.
நாட்டில் 296 ஆங்கிலோ - இந்தியர்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறி மத்திய அரசு இதனை நியாயப் படுத்துகின்றது.