TNPSC Thervupettagam

அரசு அதிகாரிகளின் கட்டாய ஓய்வு

July 12 , 2019 2132 days 805 0
  • அரசு அதிகாரிகளை முன்கூட்டியே ஓய்வு பெறச் செய்வதற்கான முழுமையான உரிமை மத்திய அரசுக்கு உள்ளதாக மத்தியப் பிரதமர் அலுவலகத்திற்கான இணையமைச்சர் தெரிவித்தார்.
  • கீழ்க்காண்பனவற்றின் அடிப்படையில் அவர்களை ஓய்வு பெறக் கோரலாம்.
    • நேர்மையின்மை மற்றும் திறமையின்மை
    • பொது நலன்
    • அடிப்படை விதிகள் 56(i) (1), 1972 ஆம் ஆண்டின் மத்திய குடிமைப் பணிகளுக்கான விதிகளின் விதி எண் 48, மற்றும் 1958 ஆம் ஆண்டின் அனைத்திந்திய பணி விதிகள்
  • அதிகாரிகளை மதிப்பாய்வு செய்யும் அதிகாரமும் அரசுக்கு உண்டு. அதன்படி ஜூலை 2014 – மே 2019 காலகட்டங்களில் 36,765 குரூப் A அதிகாரிகள், 82654 குரூப் B அதிகாரிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • 125 குரூப் A மற்றும் 187 குரூப் B அதிகாரிகள் ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்