TNPSC Thervupettagam

அரசு மருத்துவமனைகளின் உடல் உறுப்பு தானம்

June 9 , 2026 5 days 146 0
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டில் இறந்தவர்களின் உடல் உறுப்பு தானத்தில் 64% அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பாகும்.
  • இறந்தவர்களின் உடல் உறுப்பு தானம் 2022-ஆம் ஆண்டில் 156 ஆக இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் 268 ஆக அதிகரித்தது, மேலும் 2025-ஆம் ஆண்டில் 266 ஆக உயர்ந்த அளவிலேயே காணப்பட்டது.
  • மொத்த உறுப்பு கொடையாளர்களில் அரசு மருத்துவமனைகளின் பங்கு 2022-ஆம் ஆண்டில் 33% ஆக இருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் 64% ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழ்நாட்டில் 13 அரசு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனைகள், 159 தனியார் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனைகள் மற்றும் 35 மாற்று அறுவை சிகிச்சை இல்லாத உறுப்பு மீட்டெடுப்பு மையங்கள் (NTORCs) உள்ளன.
  • மாற்று அறுவை சிகிச்சை இல்லாத உறுப்பு மீட்டெடுப்பு மையங்கள் (NTORCs) ஆனது சுமார் 15% உறுப்பு தானத்திற்குப் பங்களித்து, கொடையாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த உதவியுள்ளன.
  • தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் (TRANSTAN) ஆனது மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்