TNPSC Thervupettagam

அரசு ரயில்வே காவல் துறை இணையதளம் மற்றும் கைபேசி செயலி

October 11 , 2019 2125 days 749 0
  • உள்துறை விவகாரங்களுக்கான மத்திய இணையமைச்சரான நித்யானந்த் ராய் மத்திய அரசின் ரயில்வே காவல் துறையின் வலைதளமான “railways.delhipolice.gov.in” மற்றும் “சஹயாத்ரி” என்ற கைபேசி செயலியைத் தொடங்கியுள்ளார்.
  • இந்தியா முழுவதிலும் உள்ள ரயில்வே அதிகார வரம்பில் செயல்படும் குற்றவாளிகளின் புகைப்படங்கள் உட்பட குற்றவாளிகளின் தரவுகளை ரயில்வே காவல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
  • விரைவு பதிலெதிர்ப்புக் குறியீடுகளை (QR) சோதனை செய்து படிக்கவும்  அவசர அழைப்பு செய்யவும் இது ஒரு வசதியைக் கொண்டிருக்கும்.
சஹயாத்ரி
  • கூகுள் வரைபடத்துடன் புவியைக் குறியிடுதல் செய்வதன் மூலம் ரயில்வே பயணிகளுக்கு ஒரு காவல் நிலையத்தின் அதிகார வரம்பையும் அரசு ரயில்வே காவல் துறை அதிகாரிகளின் விவரங்களையும் அறிய சஹயாத்ரி செயலி உதவும்.
  • குற்றவியல் தரவுத் தளத்தை நிகழ்நேரத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியா முழுவதிலும் இருந்து பயணிகளின் புகார்களைத் தீர்ப்பதற்கும் குற்றங்களைக் கண்டறிவதற்கும் இது ரயில்வே காவல் துறையினருக்கு உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்