அரபிக்கடலில் அடிக்கடி உருவாகும் புயல்கள் : இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கை
August 10 , 2021 1453 days 669 0
தீவிரமான வானிலை நிகழ்வுகளின் 50 ஆண்டுகால (1970-2019) தரவுநிலைகளின் அடிப்படையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வானது சமீபத்திய தசாப்தத்தில் தீவிரமான புயல்கள் உள்ளிட்ட மோசமான வானிலை நிகழ்வுகள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது.
உலகம் முழுவதும் சராசரி வெப்பநிலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.
1891-2020 ஆகிய காலக்கட்டத்தின் போது வட இந்தியப் பெருங்கடலில் உருவான புயல்களின் கடந்தகாலத் தரவுகளை மதிப்பிடுகையில்,
1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரபிக்கடலில் சமீபத்திய சில ஆண்டுகளில் அதி தீவிரப் புயல்கள் உருவாவது அதிகரித்துள்ளது எனவும்
வங்காள விரிகுடாவில் மாற்றம் எதுவும் இல்லாமல் அதே நிலையில் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.