ஐஐடி கரக்பூரின் ஆய்வைத் தொடர்ந்து, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் கீழ் அரிசி செறிவூட்டலை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஈரப்பதம், வெப்பநிலை, காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் நீண்ட சேமிப்பு காரணமாக செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் காலப்போக்கில் குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய தொகுதியில் உள்ள அரிசி பெரும்பாலும் 2-3 ஆண்டுகளுக்கு சேமிக்கப் படுகிறது என்பதோடுஇது ஊட்டச்சத்து இழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
பொது விநியோக முறை, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் மற்றும் பிரதமரின் போஷான் திட்டத்தின் கீழ் உணவு தானிய விநியோகம் பாதிக்கப்படாது என்று அரசாங்கம் கூறியது.
அரிசி செறிவூட்டல் என்பது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் தரத்தின்படி இரும்பு, ஃபோலிக் அமிலம் (வைட்டமின் B9) மற்றும் வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துக்களைச் சேர்ப்பதாகும்.
அரிசியின் சுவை அல்லது தரத்தை மாற்றாமல் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையைக் குறைக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.