அரிதான சுதந்திரமாகச் சுற்றித் திரியும் கடல் நூற்புழு
May 29 , 2025 332 days 294 0
தமிழ்நாட்டின் மணல் நிறைந்த கடற்கரையில் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஒரு புதிய வகை கடல் நூற்புழு எனப்படும் ஒரு சிறிய புழு போன்ற உயிரினத்தை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் புதிய இனம் ஆனது, ஃபெரோனஸ் ஜெயராஜ்புரி தத்தா & ரிஸ்வி, 2025 எனப் பெயரிடப்பட்டது.
இது அரிதான நூற்புழுக்களின் குழுவான ஃபெரோனஸ் இனத்தைச் சேர்ந்தது.
சுதந்திரமாக சுற்றித் திரியும் கடல் நூற்புழுக்கள் கடல் வளத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை மற்றும் கடலோரச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலைக்கு முக்கிய குறிகாட்டிகளாக செயல்படுகின்றன.
சமீபத்திய ஒரு கண்டுபிடிப்புக்கு முன்பு, ஃபெரோனஸ் இனத்தில் இரண்டு இனங்கள் மட்டுமே அறியப்பட்டன.
அவற்றுள் ஒன்று 1966 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலும் மற்றொன்று 2015 ஆம் ஆண்டில் சீனாவிலும் கண்டறியப்பட்டது.