மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்தபானி புலிகள் காப்பகத்தில் முதல் முறையாக ஒரு அரிய வகை ஆசிய காட்டு நாய் (செந்நாய்) தென்பட்டது.
இவ்வகை செந்நாய்கள் 14–20 கொண்ட கூட்டங்களாக வேட்டையாடும், மான், சாம்பார் மற்றும் புள்ளிமான் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் மிகவும் சமூகப் பழக்கமுள்ள வேட்டையாடும் விலங்குகளாகும்.
இது 2026 ஆம் ஆண்டில் ரதபானியில் பதிவு செய்யப்பட்ட ஆறாவது அரிய வனவிலங்கு இனமாகும்.
செந்நாய்கள், IUCN செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப் பட்டு உள்ளது.
இதற்கு முன்னர், செந்நாய்கள் முக்கியமாக கன்ஹா, பந்தவ்கர் மற்றும் பெஞ்ச் போன்ற சரணாலயங்களில் காணப்பட்டனஆனால் இப்போது அவை ரத்தபானி போன்ற புதிய வனப்பகுதிகளுக்கும் பரவி வருகின்றன.