மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி சபையானது (CCRAS) திரவியரத்நகர நிகண்டு மற்றும் திரவியநாமகர நிகண்டு எனப்படும் இரண்டு அரிய ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளை புதுப்பித்து வெளியிட்டுள்ளது.
திரவியரத்நகர நிகண்டு ஆனது (கி.பி. 1480) முத்கல பண்டிதரால் எழுதப்பட்டது.
இது மருந்துகளின் பெயர்கள், பண்புகள் மற்றும் சிகிச்சைப் பயன்பாடுகள் பற்றிய பல தகவல்களை வழங்கும் ஒரு விரிவான அகராதி ஆகும்.
பீஷ்ம வைத்தியரால் எழுதப் பட்டதாகக் கூறப்படும் திரவியநாமகர நிகண்டு ஆனது, தன்வந்தரி நிகண்டுவின் ஒரு தனித்துவமான பிற்சேர்க்கையாகும்.
இது ஆயுர்வேத மருந்தியலில் மிகவும் ஒரு சிக்கலான ஆனால் முக்கியமான களமாக விளங்கும் மருந்துப் பெயர்களின் ஒத்தப் பெயர்களில் கவனம் செலுத்துகிறது.