அரிவாள் வடிவ உயிரணு இரத்தசோகை நோய்க்கான மரபணு சிகிச்சை
November 22 , 2023 595 days 334 0
அரிவாள் வடிவ உயிரணு இரத்தசோகை நோய் மற்றும் இரத்த அழிவு சோகை (தலசீமியா) ஆகியவற்றிற்கான உலகின் முதல் மரபணு சிகிச்சை முறைக்கு ஐக்கிய பேரரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் மற்றும் தலாசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு காஸ்கேவி மருந்தினை வழங்க அங்கீகரித்துள்ளது.
அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் மற்றும் தலாசீமியா ஆகிய இரண்டு பாதிப்புகளும், ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்ற புரதத்தைச் சுமக்கும் மரபணுக்களில் ஏற்படும் பிழைகளால் ஏற்படுகின்றன.