அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் குறித்த தவறான கருத்துகளுக்கான முதல் மதிப்பீட்டு அளவுகோல்கள்
June 1 , 2025 59 days 98 0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) ஆனது, சமீபத்தில் இந்தியாவிற்கான இந்தியாவின் முதலாவது ICMR-SCD தவறான கருத்துகளுக்கான முதல் மதிப்பீட்டு அளவினை (ISSSI) உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் பன்முகத் தன்மை காரணமாக உலகளவில் கிடைக்கக் கூடிய மூன்று அளவுகோல்கள் இதற்கு பொருத்தமற்றவையாக உள்ளன.
ISSSI ஆனது, மருத்துவ மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளில் கிடைக்கின்ற, இந்தியாவில் முதன்மையான மற்றும் உலகளவில் நான்காவது அளவுகோல் ஆகும்.
அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோயானது ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒன்று என இரண்டு பிறழ்ந்த β-குளோபின் மரபணுக்களின் மீதான பரம்பரை வழி கடத்தலினால் ஏற்படுகிறது.
ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிக்கு அடுத்தபடியாக, உலகளவில் அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் (SCD) பரவலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.