ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் (JWST) பயன்படுத்தி, வானியலாளர்கள் மெத்தனால், அசிடால்டிஹைட், எத்தனால், மெத்தில் ஃபார்மேட் மற்றும் அசிட்டிக் அமிலம் என்கின்ற ஐந்து சிக்கலான கரிம மூலக்கூறுகளைக் கண்டறிந்தனர்.
இந்த மூலக்கூறுகள் 160,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெரிய சீரற்ற பெரு விண்மீன் திரளில் (LMC) ST6 எனப்படும் ஒரு நட்சத்திர உருவாக்கத்திற்கு முந்தைய நிலையிலான ஒன்றை (புரோட்டோஸ்டார்) சுற்றி காணப்பட்டன.
மெத்தனால் முன்னர் அங்கு கண்டறியப்பட்ட அதே வேளையில், முதன்முறையாக விண்வெளியில் அசிட்டிக் அமிலம் கண்டறியப்பட்டது.
RNA மூலக்கூறின் சர்க்கரை மூலக்கூறு முன்னோடியான கிளைகோல்டிஹைட்டின் தற்காலிக அறிகுறிகளும் அங்கு காணப்பட்டன.
LMC திரளின் உலோகங்கள் செறிவு குறைந்த சூழல் ஆனது, தூசி துகள்கள் சில கனமான கூறுகளுடன் கூட சிக்கலான வேதியியல் செயல்முறையைத் தூண்டக் கூடும் என்பதை வெளிப்படுத்தி, ஆரம்பகால பேரண்ட சூழல்களைப் பிரதிபலிக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்புகள் ஆரம்பகால பேரண்டத்தில் உயிரினங்களின் உருவாக்கத் தொகுதிகள் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதற்கான நுண்ணறிவுகளை வழங்குகின்றன.