TNPSC Thervupettagam

அருகி வரும் உயிரினங்களின் செந்நிறப் பட்டியல்

October 9 , 2025 4 days 49 0
  • IUCN அமைப்பின் (சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்) 2025 ஆம் ஆண்டு உலக பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா தனது முதல் அருகி வரும் உயிரினங்களின் செந்நிறப் பட்டியலை வெளியிட்டது.
  • இந்தியாவின் செந்நிறப் பட்டியல் ஆனது, உலகளாவிய வளங்காப்புத் தர நிலைகளுடன் ஒன்றி, அதன் எல்லைக்குள் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களை ஆவணப்படுத்துகின்றது.
  • இந்த மாநாடு ஆனது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்றது.
  • இந்தியா 1969 ஆம் ஆண்டு முதல் IUCN ஒன்றியத்தின் உறுப்பினர் நாடாக உள்ளது.
  • நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் IUCN மாநாடு ஆனது, உலகளாவிய வளங்காப்பு முன்னுரிமைகள் குறித்து வாக்களிப்பதற்காக 1,400க்கும் மேற்பட்ட உறுப்பினர் அமைப்புகளை ஒன்றிணைத்தது.
  • இந்த மாநாடானது இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டில் பிரான்சின் மார்சேயில் நடைபெற்றது.
  • 2025 ஆம் ஆண்டு மாநாடானது, மீள்தன்மை மிக்க வளங்காப்பு நடவடிக்கை, பருவ நிலை இடர் குறைப்பு, சம பங்கீடு, இயற்கைக்கு உகந்த பொருளாதாரப் பிரிவுகள் மற்றும் வளங்காப்பு சார் புத்தாக்கம் ஆகிய ஐந்து கருத்துக்களில் கவனம் செலுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்