TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேசத்தின் கிவி திட்டம் 2026

May 24 , 2026 16 hrs 0 min 38 0
  • அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் முதன்மை இயற்கை கிவி மையமாக மேம்படுத்துவதற்காக "அருணாச்சலப் பிரதேசத்தின் கிவி திட்டம்" என்ற திட்டத்தை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் (MDoNER) அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் திட்டமானது சுமார் ₹167 கோடி மதிப்பீட்டில் “வளர்ச்சியடைந்த வடகிழக்கு” என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
  • இது அருணாச்சலப் பிரதேசத்தின் முக்கியப் பகுதிகளில் ஆறு அறுவடைக்கு பிந்தைய மையங்களைக் கொண்ட தொகுப்பு அடிப்படையிலான மாதிரியைப் பின்பற்றுகிறது.
  • இந்த முன்னெடுப்பானது தர அடையாளம்/பிராண்டிங், மதிப்பு கூட்டல், குளிர்-சங்கிலி மேம்பாடு மற்றும் விவசாயிகளுக்கான சந்தை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • இந்தியாவின் கிவி உற்பத்தியில் 50%-க்கும் மேல் அருணாச்சலப் பிரதேசம் உற்பத்தி செய்கிறது என்பதுடன் மேலும் இயற்கை கிவி சான்றிதழைப் பெற்ற முதல் மாநிலமும் இதுவே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்