ஆந்திரப் பிரதேசம் ஆனது, அதன் கடற்கரையோரத்தில் நீண்ட தொடர்ச்சியான அருமண் தனிமக் கூறுகள் (REE) நிறைந்த கடற்கரை மணல் படிவுகளைக் கொண்டு உள்ளது.
ஸ்ரீகாகுளத்திலிருந்து நெல்லூர் வரை 974 கி.மீ நீளமுள்ள இந்த வழித் தடம், பீமுனிபட்டணம், கலிங்கப்பட்டினம், காக்கிநாடா, நர்சாபூர், மச்சிலிப்பட்டினம், சிராலா, வோடரேவு, இராமாயப்பட்டினம் மற்றும் துகராஜப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய தளங்களைக் கொண்டுள்ளது.
இந்தப் பதிவுகளில் மோனாசைட்டில் நிறைந்துள்ளன என்பதோடுஇதில் 55–60% அருமண் ஆக்சைடுகள் மற்றும் 8–10% தோரியம் உள்ளன.
இந்தியாவின் மோனாசைட் இருப்புக்களில் 30–35% இந்த மாநிலத்தில் உள்ளது மற்றும் நியோடைமியம், பிரசோடைமியம், லாந்தனம் மற்றும் சீரியம் போன்ற லேசான அரு மண் கூறுகளைக் கொண்டுள்ளது.
உள்கட்டமைப்பில் கூடூரில் உள்ள இந்திய அருமண் தனிம லிமிடெட் (IREL) செயலாக்க ஆலை மற்றும் கடற்கரை மணல் பிரிப்பு அலகுகள் அடங்கும்.