உருக்கி இணைக்கப்பட்ட அருமண் நிரந்தர காந்தங்களை (REPM - Rare Earth Permanent Magnets) உருவாக்குவதற்கான 7,280 கோடி ரூபாய் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
முழுமையான REPM சூழல் அமைப்பை உருவாக்க இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இது போன்ற முதல் திட்டம் இதுவாகும்.
இந்தத் திட்டம் ஆனது ஆண்டிற்கு 6,000 மெட்ரிக் டன் (MTPA) அளவிலான ஒருங்கிணைந்த REPM உற்பத்தி திறனை நிறுவும்.
REPM ஆனது மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் வலுவான காந்தங்கள் ஆகும்.
இந்தத் திட்டம் விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தில் 6,450 கோடி ரூபாயையும் மூலதன மானியமாக 750 கோடி ரூபாயையும் வழங்குகிறது.
இந்தத் திட்டம் 7 ஆண்டுகளுக்கு செயலில் இருக்கும் என்பதோடு மேலும் ஆத்மநிர்பர் பாரத் (தன்னிறைவு கொண்ட இந்தியா) மற்றும் 2070 ஆம் ஆண்டில் நிகரச் சுழிய உமிழ்வு என்ற இலக்கை ஆதரிக்கிறது.