அரேபியக் கடலில், ஒவ்வோர் ஆண்டின் ஏப்ரல்-மே மாதங்களிலும் கேரளப் பகுதி கடற் கரைக்கு அருகில் 30°C கடல் மேற்பரப்பு வெப்பநிலையை விட அதிகமான அளவில் சிறிய வெப்ப நீர் திரட்சி உருவாகும்.
இந்த வெப்பமான நீர் திரட்சி உள்ளூர் வெப்பச் சலனத்தைத் தூண்டி, இந்திய துணைக் கண்டத்தை நோக்கி தென்மேற்கு பருவக் காற்றை ஈர்க்க உதவுகிறது.
எல் நினோ நிகழ்வுகள் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காற்றோட்ட வடிவங்களைச் சீர்குலைப்பதன் மூலம் இந்திய கோடை கால பருவமழையை தாமதப் படுத்துகின்றன.
எல் நினோவுக்குப் பிறகு, 4 முதல் 5 மாதங்களுக்குப் பிறகு இந்தியப் பெருங்கடல் வெப்ப விரிவாக்க விளைவு ஆனது இந்தியப் பெருங்கடலில் தாமதமான வெப்ப மயமாதல் நிகழ்வினை ஏற்படுத்துகிறது.
கிழக்கத்தியக் காற்று மேற்பரப்பு குளிர்ச்சியைக் குறைத்து, தென்கிழக்கு அரேபியக் கடலில் சிறிய வெப்ப நீர் திரட்சியைத் தீவிரப்படுத்துகிறது.
ஒரு வலுவான வெப்ப நீர் திரட்சி குறைந்த அழுத்தத்தை உருவாக்குகிறது என்பதோடு இது கேரளாவை நோக்கி ஈரமான காற்றை இழுத்து, சரியான நேரத்தில் பருவமழை தொடங்குவதை ஆதரிக்கிறது.
புது டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் உருவகப் படத்தில் காட்டப் பட்டுள்ளது போல 2010 ஆம் ஆண்டில் வலுவான எல் நினோ இருந்த போதிலும், இந்த வெப்ப நீர் திரட்சி காரணமாக பருவமழை முன் கூட்டியே தொடங்கியது.