அறிவியலில் சிறுமிகள் மற்றும் பெண்களின் பங்கிற்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 11
February 12 , 2022 1331 days 453 0
இந்த ஆண்டின் இந்தத் தினமானது, அறிவியலில் சிறுமிகள் மற்றும் பெண்களின் பங்கிற்கான 7வது சர்வதேச தினம் ஆகும்.
அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கேற்பினை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூகப் பங்கேற்பு அமைப்புகளுடன் இணைந்து யுனெஸ்கோ மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பினால் இந்தத் தினம் செயல்படுத்தப்படுகிறது.
2022 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, "Equity, Diversity, and Inclusion: Water Unites Us" என்பதாகும்.