அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் – பிப்ரவரி 11
February 12 , 2019 2391 days 809 0
அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 11-ஆம் தேதி அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இந்த வருடம் “உள்ளடங்கிய பசுமையான வளர்ச்சிக்காக அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வளர்ச்சிக்கு முதலீடு செய்தல்” என்ற கருத்துருவுடன் அனுசரிக்கப்பட்டது.
யுனெஸ்கோ, ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் சர்வதேச தொலைத் தொடர்பு (International Telecommunication Union - ITU) ஒன்றியம் போன்ற பல்வேறு ஐக்கிய நாடுகள் அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டு முயற்சி இந்த நிகழ்ச்சியாகும்.