அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் – தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் 75வது பிளாட்டின விழா
January 11 , 2022 1274 days 786 0
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் – தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் 75வது பிளாட்டின விழாவின் நினைவாக டாக்டர். ஜிதேந்திர சிங் ஒரு சிறப்புத் தபால் தலையினை வெளியிட்டார்.
நாட்டின் சுதந்திரத்தின் போது நிறுவப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வகங்களுள் இதுவும் ஒன்று என்பதால் இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டங்களோடு இதுவும் ஒத்து வருகிறது.
தேசிய இயற்பியல் ஆய்வகத்திற்கு 1947 ஆம் ஆண்டு ஜனவரி 04 அன்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இந்த ஆய்வகத்தின் முதன்மைக் கட்டிடமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று மறைந்த துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப் பட்டது.