அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் முதல் பெண் தலைமை இயக்குநர்
August 9 , 2022 1168 days 727 0
மூத்த மின்வேதியியல் அறிவியலாளரான நல்லதம்பி கலைச்செல்வி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் முதல் பெண் தலைமை இயக்குநர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.
இது நாடு முழுவதும் உள்ள, அரசினால் நடத்தப்படுகின்ற 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பாகும்.
இவர் இரண்டு ஆண்டு காலத்திற்கு இப்பதவியில் இருப்பார்.
லித்தியம் அயனி மின்கலங்கள் துறையில் அவரது பங்களிப்பிற்காக இவர் பிரபலமாக அறியப் பட்டார்.
கலைச்செல்வி தற்போது தமிழ்நாட்டின் காரைக்குடியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (CSIR-CECRI) தலைமை தாங்கிய முதல் பெண் அறிவியலாளர் ஆனார்.