அறிவுசார் சொத்துரிமை (IP – Intellecual Property) பற்றிய முதல் இந்திய அமெரிக்கப் பேச்சு வார்த்தை
November 2 , 2018 2386 days 883 0
அறிவுசார் சொத்துரிமைக் கொள்கைகளில் இருதரப்பு மூலோபாய ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்காக முதலாவது இந்திய-அமெரிக்கப் பேச்சுவார்த்தை புதுடெல்லியில் தொடங்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையானது அறிவுசார் சொத்துமை களத்தில் இரண்டு நாடுகளுக்குமிடையே தீர்வுகளை அடையாளம் காண்பதையும், தொழில்நுட்ப அறிவையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியானது
அமெரிக்க வர்த்தக மன்றத்தின் (American Chmber of Commerce) உலகளாவிய புத்தாக்க கொள்கை மையம்
தொழில்துறை அமைப்பான இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு (FICCI - Federation of Indian Chambers of Commerce & Industry) மற்றும் இந்திய-அமெரிக்க வர்த்தக மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இது வாஷிங்டன் டிசி மற்றும் புது டெல்லியில் மாறிமாறி ஆண்டுதோறும் நடத்தப்படும்.