அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் 100வது ஆண்டு (AMU)
December 26 , 2020 1611 days 870 0
பிரதமர் மோடி அவர்கள் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிப்பதற்காக ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள AMUவின் (Aligarh Muslim University) ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும்.
மேலும் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இந்த பல்கலைக்கழகத்தின் நிகழ்வுகளில் பிரதமர் ஒரு ”தலைமை விருந்தினராக” கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும்.
பிரதமர் மோடி அவர்கள் AMU பல்கலைக்கழகத்தை ”ஒரு சிறிய இந்தியா” என்று புகழ்ந்து உள்ளார்.
AMU ஆனது ஒரு இந்தியச் சட்டமன்றச் சட்டத்தின் மூலம் 1920 ஆம் ஆண்டில் ஒரு பல்கலைக் கழகமாக மாறியது.
இது முகம்மதியன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி (Mohammedan Anglo Oriental - MAO) என்ற நிலையிலிருந்து ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் என்ற நிலைக்கு அதனை உயர்த்தியுள்ளது.
MAO ஆனது 1877 ஆம் ஆண்டில் சர் சையது அகமது கான் அவர்களால் அமைக்கப் பட்டது.
அதன் பிறகு இந்தக் கல்லூரியானது அலிகார் இயக்கம் எனப்பட்டது.
இது இந்திய முஸ்லீம் மக்களுக்காக வேண்டி ஒரு நவீனக் கல்வி அமைப்பை ஏற்படுத்துவதன் தேவையை வலியுறுத்தியது.
இது மலப்புரம் (கேரளா), AMU முர்ஷிதாபாத் மையம் (மேற்கு வங்கம்) மற்றும் கிசான்கன்ஜ் மையம் (பீகார்) ஆகிய 3 இடங்களில் கீழ்நிலை வளாக மையங்களைக் கொண்டிருக்கின்றது.