₹62,500 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் அலைபேசி உற்பத்தித் திட்டத்திற்கு (MPMS) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அலைபேசி உற்பத்தி மற்றும் உள்நாட்டு மதிப்பு கூட்டலை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு (2026-27 முதல் 2030-31 ஆம் ஆண்டு வரை) செயல் படுத்தப் படும்.
இது 5%-25% வரையிலான உற்பத்தி ஊக்கத்தொகைகளை வழங்குகிறது, உள்நாட்டு உதிரிபாகங்கள் கொள்முதலுக்கு கூடுதலாக 1.5% ஊக்கத்தொகை மற்றும் வடிவமைப்பு, பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) 3% ஊக்கத் தொகையை வழங்குகிறது.
இது உள்நாட்டுப் புதுமைகளை ஊக்குவிக்கிறது, மின்னணு விநியோகச் சங்கிலியை பலப்படுத்துகிறது, மற்றும் தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
இந்தியாவின் உலகளாவிய திறன்பேசி உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்காக பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI-LSEM) திட்டத்தை MPMS தொடர்கிறது.