கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் அருகே உள்ள கிள்ளையில் அலை ஓதப் பகுதிகளிலான சதுப்புநில நாற்றுப் பண்ணை நிறுவப்பட்டுள்ளது.
சுமார் மூன்று லட்சம் மரக்கன்றுகளைக் கொண்டுள்ள இந்த நாற்றுப் பண்ணையானது தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள முதல் நாற்றுப் பண்ணையாகும்.
இங்கு அவிசென்னியா மரினா, அவிசென்னியா அஃபிசினாலிஸ், ரைசோபோரா முக்ரோனாட்டா மற்றும் ரைசோபோரா அபிகுலாட்டா ஆகிய நான்கு இனங்கள் வளர்க்கப் படுகின்றன.
இந்த முன்னெடுப்பானது, பசுமைத் தமிழ்நாடு திட்டம் மற்றும் தமிழ்நாடு கடலோர மறு சீரமைப்புத் திட்டம் (தமிழ்நாடு – நிலையான கடற்கரை மற்றும் வாழ்விட மறு சீரமைப்பு - TN-SHORE) ஆகியவற்றை ஆதரிக்கிறது.
பிச்சாவரம் பகுதியில் பதின்மூன்று உண்மையான சதுப்புநில இனங்கள் காணப் படுவதால், இது நீண்டகால மறுசீரமைப்புத் திட்டங்களுக்குப் பயனளிக்கிறது.