TNPSC Thervupettagam

அல்கட்ராஸ் தீவு - மறுகட்டமைப்புத் திட்டம்

May 10 , 2025 20 hrs 0 min 29 0
  • அமெரிக்க நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் ஒரு காலத்தில் ஒரு பிரபலமான சிறை அமைந்த அல்காட்ராஸ் தீவினை மீண்டும் திறந்து விரிவுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளார்.
  • "தி ராக்" என்று பிரபலமாக அறியப்பட்ட அல்கட்ராஸ் தீவானது பல தசாப்தங்களாக சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்படவில்லை.
  • முதலில் ஒரு கடற்படைப் பாதுகாப்புக் கோட்டையாக கட்டப் பட்ட இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓர் ராணுவ சிறைச்சாலையாக மறுசீரமைக்கப் பட்டது.
  • 1934 ஆம் ஆண்டில், இது முறையாக பெடரல் அரசின் சிறைச்சாலையாக மாற்றப் பட்டது.
  • இது இறுதியில் 1963 ஆம் ஆண்டில் அட்டர்னி ஜெனரல் இராபர்ட் கென்னடியால் மூடப் பட்டது.
  • இந்தத் தீவு மற்றும் சிறைச்சாலையானது தற்போது தேசியப் பூங்காக்கள் சேவை முகமையினால் மேலாண்மை செய்யப்படும் ஓர் அருங்காட்சியகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்