மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (INST) அறிவியலாளர்கள், அல்சைமர் சிகிச்சைக்கான நுண் துகள்கள் சார்ந்த வழி முறையை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் மேற்கொள்ளப் பட்டது.
இந்த சிகிச்சையானது EGCG (எபிகல்லோகேடசின்-3-கேலேட்), டோபமைன் மற்றும் டிரிப்டோபான் ஆகியவற்றை ஒரு நுண் துகள்களில் இணைத்துப் பயன்படுத்துகிறது.
இந்த நுண் துகள்கள் அமிலாய்டு பிளேக்குகள் (புரதப் படிவு நோய்க் காரணிகள்), ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், வீக்கம் மற்றும் நரம்பு செல் சேதத்தை இலக்காக குறி வைக்கின்றன.
நியூரானின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பிற்கு உதவுவதற்காக மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி (BDNF) சேர்க்கப்பட்டது.