முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் (MTR) மோயார் ஆற்றங்கரையில் 10,000க்கும் மேற்பட்ட டெர்மினாலியா அர்ஜுனா ('நீர் மருது') மரங்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர்.
மேம்பட்ட வனவிலங்கு வளங்காப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை நடத்திய ஆய்வில், சுமார் 93% மரங்கள் உயிர்ப்புடன் இருப்பதாகவும், செழிப்பாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
இந்த மரங்களில் மிக அருகி வரும் வெண் முதுகுக் கழுகுகளின் (ஜிப்ஸ் பெங்கலென்சிஸ்) மொத்தம் 56 கூடுகள் அடையாளம் காணப் பட்டன.
இந்த மரங்கள் மலபார் இராட்சத அணில்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் பிற உயிரினங்களையும் ஆதரிக்கின்றன என்பதோடுஇது அதன் அதிகச் சுற்றுச்சூழல் மதிப்பைக் காட்டுகின்றன.
பூர்வீகத் தாவரங்களை மீட்டெடுக்க உதவும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்குள் சென்னா ஸ்பெக்டபிலிஸ் மற்றும் ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா போன்ற அயல் இனங்களை அழிக்க வன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.