TNPSC Thervupettagam

அவசரச் சட்டம் பிரகடனப்படுத்துதல்

February 28 , 2019 2292 days 694 0
  • மத்திய அமைச்சரவை பின்வரும் முன்மொழிவுகளுக்காக அவசரச் சட்டப் பிரகடனப்படுத்துதலை அங்கீகாரம் செய்திருக்கின்றது.
  • இந்திய மருத்துவக் குழு (திருத்தம்) மீதான இரண்டாவது அவசரச் சட்டம் 2019.
    • இந்திய மருத்துவக் குழுவின் உறுப்பினர் மாற்று நியமனச் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மன்றம் இரண்டு வருடங்கள் வரையிலோ அல்லது இக்குழுமாற்றியமைக்கப்படும் வரையிலோ இந்திய மருத்துவக் குழுவின் அதிகாரங்களை செயல்படுத்த வழிவகை செய்கின்றது.
  • நிறுவனங்கள் (இரண்டாவது திருத்தம்) அவசரச் சட்டம் 2019
    • இது மத்திய அரசை தீர்ப்பாயங்கள் முடிவு செய்த நிதியாண்டிற்குப் பதிலாக நிறுவனங்கள் தங்களுக்கென்று புதிதாக ஒன்றை மேற்கொண்டிட அனுமதியளித்திட வழிவகை செய்கின்றது.
  • முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்யும் அவசரச் சட்டம் 2019.
    • இது முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களை தடுக்கவோ அல்லது அத்திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ஆரம்பத்திலேயே தடுக்கவோ எண்ணுகின்றது. மேலும் இம்மாதிரியான வைப்புத் திட்டங்களில் முதலீடுகளை ஏற்பதோ அல்லது முதலீடு செய்ய அழைப்பதோ ஒரு தண்டனைக்குரிய குற்றமாக கருதுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்