பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (Defence Research and Development Organisation - DRDO) ஒடிசாவின் சந்திப்பூரிலிருந்து ஆகாஷ் எம்கே–1 எஸ் என்ற ஒரு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஆகாஷ் எம்கே–1 எஸ் என்பது மேம்படுத்தப்பட்ட வான்பரப்பு இலக்குகளைச் சீராக்கி அழிக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணையாகும். இது நிலப்பரப்பிலிருந்து வான் பரப்பிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்காக ஏவப்படுகின்றது.
இந்த மீயொலி வேகம் கொண்ட ஏவுகணையானது 25 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இது 18,000 மீட்டர் உயரம் வரை சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும்.
மேம்படுத்தப்பட்ட துல்லியத் தன்மை மற்றும் அதிக வரம்பு கொண்ட இந்த வகையைச் சேர்ந்த பிற ஏவுகணைகளான ஆகாஷ் எம்கே–1, ஆகாஷ் எம்கே–2 ஆகியவை DRDOவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.