லடாக்கில் 15,000 அடி (4,500 மீட்டருக்கு மேல்) உயரத்தில் ஆகாஷ் பிரைம் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பை இந்திய இராணுவம் வெற்றிகரமாக சோதித்தது.
இது உயரமான வான்வழிப் பாதுகாப்பில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
இது மெய்க் கட்டுப்பாட்டு பகுதி (LAC) மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதி (LoC) போன்ற மிக முக்கியமான எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் பாதுகாப்பு நிலையை மிகவும் நன்கு வலுப்படுத்துகிறது.
இந்த நிலத்திலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் எறிகணை (SAM) அமைப்பு ஆனது மேம்படுத்தப் பட்ட துல்லியம், இயக்கம் மற்றும் அனைத்து வானிலை செயல் திறனையும் கொண்டுள்ளது.
இது ஆகாஷ் எறிகணை அமைப்பின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஆகாஷ் பிரைம் அமைப்பு ஆனது
இந்திய இராணுவத்தின் வான்வழிப் பாதுகாப்புப் பிரிவுகள்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO),
பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) மற்றும்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு மூலம் உருவாக்கப் பட்டுள்ளது.