உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோ அமைப்பானது ஹைதராபாத் நகரத்தை “அறுசுவை உணவியல்” என்ற வகையின் கீழ் “ஆக்கப்பூர்வ நகரம்” என்று அறிவித்துள்ளது.
மேலும் மும்பை நகரமும் “திரைப்பட வகையின்” கீழ் “ஆக்கப்பூர்வ நகரம்” என்ற குறியீட்டைப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்தெடுத்த 66 பொலிவுறு நகரங்களில் ஹைதராபாத் மற்றும் மும்பை மட்டுமே இந்தியாவிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நகரங்கள் ஆகும்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் சென்னை, வாரணாசி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
யுனெஸ்கோ அமைப்பானது ஏழு பிரிவுகளின் அடிப்படையில் “ஆக்கப்பூர்வ நகரங்கள்” என்ற அந்தஸ்தை வழங்குகின்றது.