ஆக்கிரமிப்பு தாவரங்கள் இல்லாத வடுவூர் பறவைகள் சரணாலயம்
June 8 , 2025 53 days 85 0
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு தாவரங்கள் / அயல்நாட்டு ஊடுருவல் தாவரங்கள் இல்லாத வடுவூர் பறவைகள் சரணாலயம் குறித்த சிறப்பு அஞ்சல் உறையினை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
வடுவூர் பறவைகள் சரணாலயம் ஆனது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அடையாளம் காணப் பட்டு 2022 ஆம் ஆண்டில் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சரணாலயம் சுமார் 118 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக அமைகிறது.
உள்நாட்டு /பூர்வீகத் தாவரங்களை விட அதனுடன் வளத்திற்காக போட்டியிடும் அயல் நாட்டு இனங்கள் சரணாலயத்தில் இருந்து அகற்றப்பட்டு, தற்போது இந்த ராம்சார் தளம் ஆக்கிரமிப்பு தாவரங்கள் இல்லாத பகுதியாக உள்ளது.