ஆக்ரா : பன்முகப்படுத்தப்பட்ட குப்பை செயல்முறையாக்க அமைப்பு
September 25 , 2023 595 days 337 0
ஆக்ரா நிர்வாகம், மொத்தக் கழிவு உற்பத்தி அமைப்புகளிடமிருந்துப் பெறப்படும் கரிமக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக பன்முகப்படுத்தப்பட்ட குப்பை செயல்முறையாக்க (மறுசுழற்சி) ஆலைகளைத் தொடங்கியுள்ளது.
இந்த மாதிரியானது, மாநகராட்சி அரசாங்கத்திற்கு ஏற்படும் போக்குவரத்து செலவை வெகுவாகக் குறைக்கும்.
ஆக்ராவில் 0.48 கிலோ தனி நபர் கழிவு உற்பத்தி விகிதத்துடன் ஒரு நாளைக்கு 916 டன் (TPD) நகராட்சி திடக் கழிவுகள் உருவாக்கப்படுகிறது.
மலர் மற்றும் கழிவுகளில் இருந்து பெறப்படும் உரம் ஆனது ஜியோ-மார்ட் மற்றும் அமேசான் ஆகிய இணைய வணிகத் தளங்களில் கிடைக்கப் பெறுகிறது.