குழுத் தலைவர் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றார்.
1984 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணித்து, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெரும் பெருமையினைப் பெற்றவர் ராகேஷ் சர்மா ஆவார்.
சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான (ISS) ஆக்சியம் 4 விண்வெளிப் பயணத்தின் (ஆக்ஸ்-4) ஒரு பகுதியாக பங்கேற்றுள்ளார்.
இது புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் 9 ஏவுகலம் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
ஆக்சியம் 4 விண்வெளிப் பயணத்தில் ஆக்சியம் ஸ்பேஸ், நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் தலா ஒரு விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன.
இக்குழுவினர் விண்வெளியில் 14 நாட்கள் வரை தங்கி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வார்கள்.
ஆக்சியம் 4 விண்வெளிப் பயணம் என்பது தனியார் விண்வெளி வீரர்களின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான நான்காவது பயணமாகும்.