பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அறிவியல் ஆய்வாளர்கள், 'ஆங்ஸ்ட்ரோம்-அளவிலான' சில்லுகளை உருவாக்குவதற்கு என அரசாங்கத்திடம் ஒரு முன்மொழிவினை சமர்ப்பித்துள்ளனர்.
தற்போது உற்பத்தியில் உள்ள மிகச்சிறிய சில்லுகளை விட இது மிகவும் சிறியதாகும்.
இரு பரிமாண (2D) பொருட்கள் எனப்படும் புதிய வகை குறைக்கடத்தி பொருட்களைப் பயன்படுத்தி தொழில்நுட்பக் கூறுகளை உருவாக்குவதற்கான ஒரு முன்மொழிவினை அரசாங்கத்திற்கு வழங்கியது.
தற்போது, குறைக்கடத்தி உற்பத்தியில் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் போன்ற மேம்படுத்தப் பட்ட நாடுகள் முன்னிலை வகிக்கும் சிலிக்கான் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் முன்னிலை பெற்றுள்ளன.
தற்போது உற்பத்தியில் உள்ள மிகச்சிறிய சில்லு சாம்சங் மற்றும் மீடியா டெக் போன்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வரும் 3-நானோமீட்டர் முனையம் ஆகும்.